Thursday 30 July 2015

பல் நோய் நீக்கும் வெயிலுகந்த விநாயகர் ஆலயம்

ஆன்மிக அன்பர்களே வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
இன்றிலிருந்து நமக்காக மந்திர எண்கணித நிபுணர் திரு.ஆர்.பி.ஓம் அவர்கள்
மக்களுக்கு பயன் தரும் விநாயகர் ஆலயம் பற்றியும் விநாயக பெருமானது அருமை பெருமைகளையும் எழுத இருக்கிறார்.
ஆலயம் :
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம் 



நேயர்களே நான் ஆர்.பி.ஓம் இன் அன்பு வணக்கங்கள்.
ஆலயம் :உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம்
இருப்பிடம்:
இது இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் , இராமநாதபுரம் மாவட்டம் , திருவாடானை வட்டம் உப்பூர் எனும் ஊரில் அமைந்துள்ள இந்து சைவ வழிபாட்டுத்தலமான விநாயகர் கோயில்.

தலவரலாறு
தட்சன், தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த ஒரு மாபெரும் யாகம் செய்தான். சிவபெருமானைத் தவிர அனைத்து தேவதைகளையும் அழைத்து யாகத்தை நடத்தினான். இந்த யாகத்தில் கலந்துகொண்டதால், சூரியனுக்கு தண்டனை கிடைத்தது. தன் தவறுக்கு பரிகாரம் தேட முற்பட்ட சூரியன், வன்னி மந்தார வனத்தில் தவமிருந்தார். சூரியன் தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவர் பாவம் போக்க அருளினார். தனது ஒளிக்கிரணங்கள் விநாயகப் பெருமான் மீது பட்டு, தான் வணங்க அதை ஏற்குமாறு கோரினார். அவ்வாறே அருளினார் விநாயகர். அதன்படி, தட்சிணாயன, உத்தராயன காலங்களில் தெற்கு மற்றும் வடக்குப் புறமாக இவர் மீது சூரிய ஒளி படுகிறது. இதனால் இவருக்கு வெயில் உகந்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது என்பது தல புராணம்.

வழிபாட்டு பலன்கள் :

சூரியனால் உண்டாகிற ஜாதக தோஷங்கள் விலகும்.
சிலருக்கு பல் நோய்க்தானே என்று எண்ணத்தோன்றும்.ஆனால் இளம் வயதிலேயே 2,3 பற்களை இழந்து முக வசீகரம் குன்றி காணப்படுவார்கள்.இப்படி பல் நோய் வருவதற்கு முன்பே இத்தலத்து விநாயக பெருமானை வேண்டி நோயிலிருந்து விடுபடலாம்
எலும்பு நோய்கள்,உஷ்ண நோய்கள்,கண் பிணிகள் அகலும்

வாழ்க வளமுடன்
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.ஓம்


: